இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி மார்க்- 3 ராக்கெட் மூலம் 36 செயற்கைகோள்களை இந்த மாதம் 3 வது அல்லது 4ஸவது வாரத்தில் விண்ணில் ஏவ உள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2;வது ஏவுதளத்திலிருந்து ஏவப்பட உள்ள இந்த ராக்கெட் 640 டன் எடை கொண்டது. இந்த வகை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் எந்திரங்களால் இயக்கப்படும் மூன்று நிலைகளைக் கொண்ட ராக்கெட் ஆகும். இதில் முதல் நிலை திட எரிபொருள், இரண்டாவது திரவ எரிபொருள் மற்றும் மூன்றாவது நிலையில் கிரையோஜினிக் எந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 36 செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக பல்வேறு கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது.
அதுமட்டுமில்லாமல் விநியோக அலகுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கிரையோஜெனிக் என்ஜின் உள்ள இரண்டாவது கட்டத்தில் 36 செயற்கைகோள்களுடன் வெப்ப கவசம் பொருத்தப்படும். இந்த 36 சேர்க்கைகோள்களும் 6 டன் எடையை கொண்டவை ஆகும். வணிக ஏவுதல் மூலம் முதல்முறையாக இந்திய ராக்கெட் சுமார் 6 டன் எடையுள்ள செயற்கைக்கோள்களை சுமந்து செல்கிறது. குறைந்த புவி சுற்றுப் பாதையில் இந்த செயற்கைக்கோள்கள் நிலைநிறுத்தப்படுகிறது. இந்தியா பார்தி குளோபல் மற்றும் இங்கிலாந்து நாட்டு அரசின் கூட்டும் முயற்சியாகும். மேலும் 36 செயற்கைகோள்களின் மற்றொரு தொகுப்பு 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புவி சுற்று பாதையில் வைக்க திட்டமிட்டுள்ளது. இந்த வகை சேர்க்கை கோள்கள் நிறுவனங்களின் தகவல் தொடர்புடைய சேவைகளை வழங்குவதற்காக குறைந்த புவி சுற்றுப் பாதையில் 250 அருண் செயற்கை கோள்களின் தொகுப்பை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.