Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!…. இவ்வளவு வியூவெர்ஸா?…. புது மைல் கல்லை எட்டிய விஜய் பாடல்…. இணையத்தில் வைரல்….!!!!

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துவரும் “வாரிசு” படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் நேரடியாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அத்துடன் பிரகாஷ் ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகிபாபு உட்பட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் சூட்டிங் மும்முரமாக நடந்து வருகிறது. தீபாவளி தினத்தன்று “வாரிசு” படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்து இருந்தது. இதையடுத்து இந்த படத்தின் முதல் பாடலான “ரஞ்சிதமே” பாடலை சென்ற 5ம் தேதி படக்குழு வெளியிட்டது.

விஜய் மற்றும் எம்.எம்.மானசி குரலில், விவேக் வரிகளில் வெளியாகிய “ரஞ்சிதமே” பாடல் துள்ளல் இசையோடு ரசிகர்களை கவர்ந்து ஹிட்டானது. இந்த நிலையில் ரஞ்சிதமே பாடல் 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இருப்பதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |