மராட்டிய மாநிலம் மும்பை நகரில் பைகுல்லா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் ஜேஜே என்ற அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் கீழ் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சர். டிஎம் பெடிட் என்ற மருத்துவமனையும் செயல்பட்டு வருகிறது. இந்த பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரி வளாகத்தில் நீர்க்கசிவு ஏற்படுவதாக புகார் வந்துள்ளது.
இதை சரி செய்வதற்காக சென்றபோது பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது சுமார் 132 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது. இந்த மருத்துவமனை கடந்த 1892-ம் ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக ஒரு சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தகவலை மருத்துவ அதிகாரி டாக்டர் அருண் ரத்தோட் கூறியுள்ளார்.