மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஆலியா மானசா. இவர் விஜய் டிவியில் பிரவீன் பென்னட் இயக்கிய ராஜா ராணி தொடரில் சஞ்சீவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்க். அப்போது இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. தனது காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தாலும் ஆலியா தனது காதலன் சஞ்சீவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஐலா மற்றும் அர்ஷ் 2 குழந்தைகள் உள்ளனர்.
இவருக்கு சமீபத்தில் தான் 2-வது மகன் பிறந்தார். 2 வது பிரசவத்திற்கு பிறகு ஆலியா மானசாவின் உடல் எடை அதிகரித்தது. தற்போது ஆலியா புதிய சீரியல் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இதற்காக ஆலியா தாது எடையை 2 மாதத்தில் 10 கிலோ வரை குறைத்துள்ளார். தனது உடல் எடையை மிகவும் கஷ்டப்பட்டு குறைத்துள்ள ஆலியாவிற்கு அவரது கணவர் சஞ்சய் சூப்பரான பரிசு ஒன்றை அளித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram