சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர் 15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சீனாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசி உதவுகிறது. இதனால் சீனாவில் தயாரித்த கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.