தென்காசி மாவட்டம் செங்கோட்டை விஸ்வநாதபுரத்தில் தங்கச்சன் என்பவர் வசித்து வருகிறார். இவரின் மகன் வர்கீஸ். இவர்களது வீட்டில் விற்பனைக்காக திமிங்கல உமிழ்நீர் வைத்திருப்பதாக போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த திமிங்கல உமிழ் நீரை பறிமுதல் செய்தனர்
இந்த திமிங்கலம் உமிழ்நீர் ரூ.41,55,000 மதிப்பிலானது என்று தெரிவித்தனர். மேலும் அதனை விற்க முயன்ற தங்கச்சன் மற்றும் அவரது மகன் இருவரையும் போலீசார் கைது செய்து செங்கோட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.