Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா!… 41 வருடங்களுக்கு பிறகு கேக் துண்டு ஏலம்… விலை எவ்வளவு தெரியுமா?…. தெரிஞ்சா அசந்து போயிடுவீங்க….!!!

இங்கிலாந்து அரசு குடும்பத்தை சேர்ந்த சார்லஸ் 1981 ஆம் ஆண்டு இளவரசி டயானாவை மணந்த போது திருமணத்தில் கேக் வெட்டப்பட்டது. விருந்தினர்களில் ஒருவரான நைஜெல் ரிக்கெட்ஸ் என்பவர் 41ஆண்டுகளாக கேக் துண்டுகளை பாதுகாப்பாக வைத்திருந்தார். இந்த கேக்கை இங்கிலாந்தில் உள்ள டோர் அண்ட் ரீஸ் நிறுவனம் ஏலம் விடுகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.27,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருமணத்திற்காக 23 கேக்குகள் வெட்டப்பட்டிருந்தாலும், இந்த கேக் துண்டானது 5 அடுக்குகள் மற்றும் 5 அடி உயரமுள்ள கேக்கில் இருந்தது என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அந்த கேக் ஆனது கேக் வாங்கப்பட்ட பேட்டியில் இருந்து உள்ளது.

அந்த பெட்டியில் சார்லஸ் கையால் எழுதப்பட்ட நன்றி குறிப்பும் உள்ளது. அதில், “இவ்வளவு சிறந்த பயனுள்ள ஒன்றை கண்டுபிடிப்பதற்கு நீங்கள் இவ்வளவு சிரமத்திற்கு ஆளாகி இருக்க வேண்டும் என்று டயனாவும் நானும் வார்த்தையில் சொல்ல முடியாத அளவுக்கு மகிழ்ச்சி அடைந்து உள்ளோம். மேலும் எந்த வீட்டில் அந்த கேக் இறுதியாக உள்ளதோ, அந்த வீட்டில் நாங்கள் அதை பொக்கிஷமாக வைப்போம் என்று நாங்கள் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்” என்று எழுதப்பட்டுள்ளது. அதனை போல சில நாட்களுக்கு முன்பு ராணி எலிசபெத்தின் டீ பேக் ரூ.9.5 லட்சத்திற்கு விற்கப்பட்டது. இந்த டீ பேக் ஆனது பயன்பாட்டிற்கு வந்த பிறகு வின்ட்சட் கோட்டையில் இருந்து கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Categories

Tech |