விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆல்யா மானசா. இவர் நடிகர் சஞ்சையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கும் நிலையில், தனியாக யூடியூப் சேனல் தொடங்கி பல்வேறு விதமான வீடியோக்களை அதில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நடிகை ஆல்யா மானசா குழந்தை பெற்றதற்கு பிறகு தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் இனியா என்ற தொடரில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த தொடரில் நடிப்பதற்கு நடிகை ஆல்யா தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ஒரு நாளைக்கு விஜய் டிவியில் 12 முதல் 10 ஆயிரம் வரை நடிகை ஆல்யா சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் தற்போது சன் டிவியில் நடிக்கும் தொடருக்கு ஒரு நாளைக்கு ரூபாய் 20,000 வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் இந்த தகவலில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது தெரியவில்லை.