Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! பிக்பாஸ் சீசன் 6-ல் இத்தனை போட்டியாளர்களா….? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2017-ம் ஆண்டு ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியில் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 6-வது சீசன் தொடங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சி 100 நாட்கள் வரை நடைபெறும் நிலையில், பிக்பாஸ் 6-வது சீசன் வருகிற அக்டோபர் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு மிகப் பிரமாண்டமாக தொடங்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்து கடந்த 3 மாதங்களாகவே தகவல்கள் வெளியாகி கொண்டே இருக்கிறது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் போகும் 2 பிரபலங்கள் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவி பிரபலம் மைனா நந்தினி மற்றும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தம்பி மணிகண்டன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக புதிதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த சீசனில் 24 போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும், 18 பேர் சினிமா துறையைச் சார்ந்தவர்களாகவும், 6 போட்டியாளர்கள் மற்ற துறையைச் சார்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |