தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக ஜொலிப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய். அதன் பிறகு நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது. இதே போன்று நடிகர் அஜித் எச். வினோத் இயக்கத்தில் நடித்துள்ள துணிவு திரைப்படமும் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ரிலீஸ் ஆகிறது.
வாரிசு திரைப்படத்திலிருந்து 3 பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில், துணிவு படத்திலிருந்து 2 பாடல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் துணிவு படத்தின் தெலுங்கு போஸ்டரை பட குழு தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி துணிவு படம் தெலுங்கில் தெகிம்பு என்ற பெயரில் ரிலீஸ் ஆகிறது. இந்த போஸ்டர் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் வாரிசு படம் வாரசுடு என்ற பெயரில் தெலுங்கில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Proud to announce our Andhra Pradesh and Telangana distributor @Radhakrishnaen9 @IVYProductions9 #ThunivuPongal #Thunivu #NoGutsNoGlory#Ajithkumar #HVinoth@boneykapoor @bayviewprojoffl @kalaignartv_off @netflixindia #RomeoPictures @mynameisraahul @sureshchandraa @nirav_dop pic.twitter.com/r07R94QKZp
— Zee Studios (@ZeeStudios_) December 21, 2022