இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பவுண்டரி லைனில் பிடித்த கேட்ச் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .
இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே முதல் டி20 போட்டி நார்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு விளையாடியது . ஆனால் 8.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 54 ரன்களை எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது .இதனால் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது .
A fantastic piece of fielding 👏
We finish our innings on 177/7
Scorecard & Videos: https://t.co/oG3JwmemFp#ENGvIND pic.twitter.com/62hFjTsULJ
— England Cricket (@englandcricket) July 9, 2021
இந்தப் போட்டியில் பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த இந்திய வீராங்கனை ஹர்லின் தியோல் பாய்ந்து பிடித்த கேட்ச் ஒன்று இணையத்தில் வைரலாகி உள்ளது. இங்கிலாந்து வீராங்கனை எமி ஜோன்ஸ் பந்தை சிக்சருக்கு அடித்தார். அப்போது பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த வீராங்கனை ஹர்லின் தியோல் தன் அசாத்திய பீல்டிங்கால் பந்தை கேட்ச் பிடித்தார். இவருடைய பீல்டிங் மற்றும் கேட்ச்சை விளையாட்டு பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.