மக்களவைத் தேர்தலில் அதிமுக மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறியது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது அதிமுக, பாஜக, பாமக, தாமக, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் போன்ற கட்சிகள் இணைந்து தான் சட்டமன்ற தேர்தலை சந்தித்து 75 இடங்களை பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் பாஜக, பாமக தனித்து காலம் கண்டாலும் மக்களவைத் தேர்தலில் இந்த கட்சிகள் மீண்டும் இணைவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளது. பாஜக ஏற்கனவே கூட்டணி உறுதிப்படுத்தி இருந்தது. திமுகவும் காங்கிரஸ் விசிக, இடதுசாரிகள், மதிமுக, தவாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மமக, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலை கட்சி என மெகா கூட்டணி வைத்து போட்டியிட்டது. மக்களவை தேர்தலில் இந்த கூட்டணி தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை போல தினகரனின் அமுமுக, தேமுதிக போன்ற கட்சிகள் ஒரு அணியில் நின்றன. மக்கள் நீதி மய்யம் சில கட்சிகளை இணைத்துக் கொண்டும், நாம் தமிழர் தனியாகவும் பயணம் செய்கிறது. அதிமுக தலைமையில் ஏற்கனவே பலமான கூட்டணி இருக்கும்போது மெகா கூட்டணி என்ற வார்த்தை ஏன் பயன்படுத்தினார்? தினகரன் அமுமுகவை கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி செய்கிறாரா என்று கேள்வி எழுகிறது. அவ்வாறு கூட்டணி அமைந்தால் இரு தரப்புக்குமே பலன் இருப்பதாக அரசியல் விமர்சனங்கள் கூறுகின்றனர்.
ஆனால் ஓரிரு நாள்களில் எடப்பாடி பழனிச்சாமியே தினகரனுடன் கூட்டணி அமைக்க 1% கூட வாய்ப்பு இல்லை என்று கூறினார். பதிலுக்கு தினகரன் கால் சதவீதம் கூட வாய்ப்பில்லை என்று காட்டமாக கூறினார். இதனால் எடப்பாடி மெகா கூட்டணி அமமுவுக்கு இடம் இல்லை என்பது உறுதியானது. அதே நேரத்தில் தான் திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகளை எடப்பாடி பழனிசாமி எடுக்கப் போகிறாரா என்ற கேள்வி எழுந்தது. பாஜகவுடன் எடப்பாடி பழனிச்சாமி அதிருப்தியில் இருப்பதாகவும், பாஜகவை கூட்டணி இருந்து கழட்டிவிடும் முயற்சியில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் காங்கிரஸ், விசிக கட்சிகளை தன் பக்கம் இழுக்கம் முயற்சி செய்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இது திமுக கூட்டணியில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. இதனை தவிர்ப்பதற்காகவே காங்கிரஸ் தலைவர் கே.எஸ்அழகிரி, விடுதலை சிறுத்தை கட்சிகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து அதிமுக உடன் தங்களுக்கு சம்பந்தமில்லை என்று தெளிவுபடுத்த வேண்டிய நிலைக்கு திமுக கூட்டணி கட்சிகள் தள்ளப்பட்டுள்ளது. இதுவும் ஒரு வகையில் எடப்பாடி பழனிச்சாமி முக்கியத்துவத்தை அதிகப்படுத்துவதாக உள்ளது. அதன்படி கட்சிக்கள்ளும், கட்சிக்கு வெளியேயும் அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் என்ற நிலை அவர் உருவாக்க முயற்சி செய்ததற்கு பலன் கிடைத்துள்ளது என்று கூறப்படுகிறது.