Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா! “எத்தனை சுகாதார திட்டங்கள்”….. தமிழக அரசை புகழ்ந்து தள்ளிய மத்திய இணை அமைச்சர்….!!!!!

தர்மபுரி மாவட்டத்தில் இரண்டு நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பாவர் வருகை புரிந்துள்ளார்.  அதன்படி முதல் நாளான நேற்று அமைச்சர் தலைமையில் சுகாதார அலுவலகம் பங்கேற்ற ஆய்வு கூட்ட தர்மபுரி மாவட்டத்தில் ஆட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், தேசிய சுகாதார இயக்கம், பள்ளி மாணவர்கள் மருத்துவ பரிசோதனை திட்டம், நடமாடும் மருத்துவ சேவைகள், ஜனனி சுரக்ஷா யோஜனா, பிரதம மந்திரி தேசிய ரத்த சத்துக்கடைப்பு திட்டம், தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய அரசு நிதியில் மாநிலங்களில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காசோநோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் ஒவ்வொரு மாவட்ட அலுவலர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஒவ்வொருவரும் தலா மூன்று பேரை தத்தெடுத்து அவர்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகளை வழங்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் முழுமையாக காச நோயை நம்மால் ஒழிக்க முடியும்‌. இதனையடுத்து தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் அதிக அளவில் பிரசவங்கள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பாராட்டினார். மருத்துவர்களையும், மருத்துவப் பணியாளர்களையும் பாராட்டிய அமைச்சர், அனைவரும் இணைந்து கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் சாதனைப்படைத்துள்ளதாக தெரிவித்தார். அதன் பிறகு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சர், அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்தார்.

Categories

Tech |