தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. மேலும் வங்கக்கடலில் உருவாகி இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தொடர்ந்து மழை பெய்தது. அதனை தொடர்ந்து சென்னையில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்தது. அதன்படி எழும்பூர், மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், பெரியமேடு, அண்ணாச்சாலை, திருவல்லிக்கேணி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் சிறிது நேரத்துக்கு வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அடுத்த சில மணி நேரங்களில் தேங்கி இருந்த மழை நீர் மாயமானது.
இதனை பார்த்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இது எப்படி என்று வாய் அடைத்து போய் உள்ளனர். தமிழகத்தில் பொதுவாக மழைக்காலம் என்றால் ஆளுங்கட்சி மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கட்டும். இது போன்ற விமர்சனங்கள் எழும்போது மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி ஏற்படும். அதன்படி தற்போது மக்களிடையே குறை கூறி எதிர்கட்சிகள் பேச முடியாத அளவுக்கு சென்னையில் பணிகள் மும்மூரமாக நடைபெற்று வருவது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் தன்னுடைய கடின உழைப்பால் மழை நீரை உடனுக்குடன் அகற்றுவதன் மூலம் சென்னை மேயர் பிரியா எதிர்க்கட்சிகளின் வாயை அடைத்து விட்டதாகவும், இதனால் அவர்கள் மண்டை குழம்பி போய் உள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.