சரத்குமார் பத்து நிமிஷம் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்ததற்கு வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கமல்ஹாசன் அவர்கள் தான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனையடுத்து, பிக்பாஸ் ஒவ்வொரு சீசனிலும் குறிப்பிட்ட தொகையை போட்டியாளர்களிடம் கொடுத்து யார் வேண்டுமானாலும் வெளியேறலாம் என அறிவிப்பார். அந்த வகையில், நேற்றைய எபிசோடில் நடிகர் சரத்குமார் 3 லட்சம் தொகையை உள்ளே கொண்டுவந்து யார் வேண்டுமானாலும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியேறலாம் என கூறினார். இந்நிலையில், இவர் பத்து நிமிஷம் இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு இவர் 10 லட்சம் சம்பளம் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.