நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து, இவர்கள் இருவருக்கும் நாளை மகாபலிபுரத்தில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
திருமணம் நடக்கும் இடத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. அதன்படி, அழைப்பிதழ் இருந்தால் மட்டும் இந்த திருமணத்தில் நுழைய முடியாது என கூறப்படுகிறது. மேலும், திருமணத்திற்கு வரும் அனைவருக்கும் ஒரு கோட் அனுப்பி வைக்கப்படும். அந்த கோடை காண்பித்தால் தான் திருமணம் நடைபெறும் இடத்திற்கு நுழைய முடியுமாம்.
மேலும், திருமணத்திற்கு வருபவர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் தான் உடை அணிய வேண்டுமாம். நாளை திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மாலை சங்கீத் நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நயன் மற்றும் விக்கி முதலமைச்சர் மு. க. ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பிதழ் அளித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.