Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா! “15 நிமிஷம் தான்” நடனமாடும் போது என்னா எனர்ஜி தெரியுமா..‌‌? தளபதி விஜயை புகழ்ந்து தள்ளிய பிரபலம்….!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் அண்மையில் பீஸ்ட் திரைப்படம் ரிலீஸ் ஆகி கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடிக்க, யோகி பாபு, சாம், பிரகாஷ் ராஜ், பிரபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் குறித்து நடிகர் மனோபாலா தற்போது ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் வாரிசு படப்பிடிப்பினன் போது நடிகர் விஜயை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடனம் ஆடும் போது புதிய மற்றும் அதிக உத்வேகத்துடன் காணப்படுகிறார். அந்த 15 நிமிட சந்திப்பு எனக்கு புதிய உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் கொடுத்துள்ளது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.+

Categories

Tech |