Categories
மாநில செய்திகள்

அடேங்கப்பா!… இப்படி ஒரு ரேஷன் கடையா….? இது வேற லெவல் பா…. உங்க ஊருக்கும் வரப் போகுதா?….!!!!!

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் 75 ரேஷன் கடைகளை புதுப்பிப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சியில் முன்மாதிரியான ரேஷன் கடை திறக்கப்பட்டுள்ளது. இந்த ரேஷன் கடையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கு தனியான வழி, கழிவறைகள், பூங்கா ,பொதுமக்கள் திட்டங்களை அறிந்து கொள்ளும் விதமாக ஓவியங்கள், திருவள்ளுவர் ஓவியம் போன்ற பல அம்சங்கள் இருக்கிறது. இதுவரை தமிழகத்தில் 2252 ரேஷன் கடைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், 3662 ரேஷன் கடைகள் ஐஎஸ்ஓ தர சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்நிலையில் முழு நேர ரேஷன் கடைகளை ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டிலும், பகுதி நேர ரேஷன் கடைகளை ரூபாய் 7 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டுவதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக ஏற்கனவே சட்டப்பேரவையில் கூட்டுறவு துறை அமைச்சர் கூறி இருந்தார். மேலும் பகுதிநேர ரேஷன் கடைகளை கார்டுகளின் எண்ணிக்கை மற்றும் கடையின் தூரம் போன்றவற்றை பொறுத்து அமைப்பதற்கு பேசிக் கொண்டிருப்பதாகவும் அமைச்சர் கூறி இருந்தார்.

Categories

Tech |