ஜன் தன் வங்கி கணக்குகளில் ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ஜி.கிஷண் ரெட்டி தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜன் தன் வங்கி கணக்குகள் மூலமாக ஏழைகள் பெருமளவில் பயன் அடைந்துள்ளனர். பொதுநல திட்டங்கள் மூலமாக அந்த வங்கி கணக்கில் இதுவரை ரூ.25 லட்சம் கோடி வரவு வைக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து மொத்தம் உள்ள ரூ.50 கோடி ஜன் தன் வங்கி கணக்குகளில் பாதி பெண்கள் பேரில் உள்ளது. ஏழைகள் அந்த கணக்குகளில் 1.75 கோடி சேமித்துள்ளனர். இதனையடுத்து நிதியை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்துவதால் இதுவரை ரூ.4 கோடி குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் மத்திய அரசு நிதி அனைத்தும் ஏழைகளை நேரடியாக சென்று அடைகிறது என்று தெரிவித்துள்ளார்.