தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. இவர் ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு தென்னிந்தியாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது கதாநாயகியாக் மட்டுமில்லாமல் முதன்மை கதாபாத்திரங்களில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவருக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பிறகும் நயன்தாரா திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது திருமணம் முடிந்த நான்கு மாதங்களில் நயன்தாரா வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைக்கு தாயானார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நயன்தாரா இந்த சர்ச்சைகளும் செவி சாய்க்காமல், தன் வேலைகளை மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது அட்லீ இயக்கத்தில் பாலிவுட் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இதனையடுத்து கடந்த பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா ரூ.10 கோடி வரை சம்பளம் வாங்கி தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக இருக்கிறார். தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ராவிற்கு பிறகு நயன்தாரா தான் அதிகம் சம்பளம் வாங்கிறார். இதனை தவிர பல வியாபாரங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் நயன்தாராவின் சொத்து மதிப்பு பற்றி தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி நயன்தாரா தற்போது ரூ.165 கோடி அளவிற்கு சொத்து இருக்கிறதாம். மேலும் ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து நிறுவியுள்ளார். எனவே இருவரது சொத்து மதிப்பையும் சேர்த்து பார்த்தால் ரூ.250 கோடி தாண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது.