தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவர் தற்போது லவ் டுடே என்ற படத்தை இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இந்த படம் கடந்த நவம்பர் மாதம் 4-ம் தேதி ரிலீஸ் ஆன நிலையில், 80 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் குறைந்த பொருள் செலவில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படமானது தெலுங்கில் விஜயின் பீஸ்ட் மற்றும் அஜித்தின் வலிமை திரைப்படங்களின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இரு திரைப்படங்களின் வசூலை விட 12 கோடி ரூபாய் அதிகமாக லவ் டுடே படம் வசூலித்ததாக கூறப்படுகிறது. மேலும் பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கு தயாரிப்பாளர்கள் பலரும் வலை வீசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.