தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் தயாரிப்பு மற்றும் விநியாக நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார்.
இவர் தலைமையில் இயங்கி வரும் விநியோக நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ். தமிழ் சினிமாவில் தயாரிப்பிலும் விநியோகத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த இந்த நிறுவனம் சில ஆண்டுகள் தள்ளி இருந்தது. மீண்டும் அரண்மனை3 திரைப்படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த இந்த நிறுவனம் தற்போது வரை பல முன்னணி படங்களை விநியோகம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இருந்து இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை இவர்கள் விநியோகம் செய்த அனைத்து படங்களிலும் இருந்து 1200 கோடி கிடைத்துள்ளதாம். அந்த ஷேரை அந்தந்த தயாரிப்பாளருக்கு சரியாக கொடுத்துள்ளதாம். இதனையடுத்து, முதலீடு இல்லாமல் இந்த விநியோகம் 10% தன் கமிஷனில் இருந்து ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்கு 120 கோடி வந்திருப்பதாக கூறப்படுகிறது.