தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு அறிமுகமாகி தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்தது. கடந்த அக்டோபர் 21-ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படத்தை அனுதீப் இயக்க, உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ஹீரோயின் ஆக நடித்துள்ளார்.
அதன் பிறகு சத்யராஜ் மற்றும் பிரேம்ஜி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு ரிலீசான நிலையில், கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்ப்படம் இதுவரை உலக அளவில் சுமார் 42 கோடி ரூபாய் வரை வசூல் சாதனை புரிந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே பிரின்ஸ் திரைப்படம் நல்ல லாபம் பார்த்து விட்டதாக, நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.