ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஜானி டெப். இவர் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் என்ற படத்தில் ஜாக் ஸ்பாரோ என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் உலக அளவில் மிகவும் பிரபலமானார். இவர் தன்னுடைய முதல் மனைவியை விவாகரத்து செய்த நிலையில், தன்னுடைய 50-வது வயதில் இரண்டாவதாக தன்னைவிட 25 வயது குறைவான அமெரிக்காவை சேர்ந்த நடிகை ஆம்பர் ஹேர்ட்டை கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்ட நிலையில், ஆம்பர் ஹேர்ட் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் ஜான் டெப் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுதி இருந்தார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பாக மாறிய நிலையில் ஜானி டெப் பல படங்களில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஆம்பர் ஹேர்ட் மீது ஜானிடெப் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கிட்டத்தட்ட 3 வருடங்களாக நடைபெற்ற நிலையில், தீர்ப்பு ஜானி டெப்புக்கு ஆதரவாக வந்துள்ளது. இந்நிலையில் ஆம்பர் ஹேர்ட் பொய் குற்றச்சாட்டுகளை கூறியதற்காக அவருக்கு நீதிமன்றம் 116 கோடி அபராதம் விதித்தது. ஆனால் ஆம்பர் ஹேர்ட் தன்னால் அவ்வளவு பெரிய தொகையை கட்ட முடியாது 8 கோடி மட்டும் அபராதமாக கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் இதை ஜானி டெப் ஏற்றுக் கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.