பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தீபிகா படுகோனே. இவர் தற்போது ஹாலிவுட் சினிமாக்களிலும் நடித்து வருகிறார். இவருடைய கணவர் பிரபல டாப் ஹீரோ ரன்வீர் சிங். அதன் பிறகு நடிகை தீபிகா நடிப்பது மட்டும் இன்றி பல்வேறு விதமான தொழில்களையும் செய்து வருகிறார். அதோடு தன்னுடைய நிறுவனத்தின் மூலம் பல்வேறு தொழில்களில் முதலீடும் செய்துள்ளார். இதனையடுத்து பேஷன் மற்றும் காஸ்மெட்டிக்ஸ் நிறுவனங்களையும் தீபிகா நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நடிகை தீபிகா படுகோனே மற்றும் அவருடைய கணவர் ரன்வீர் சிங் ஆகியோர் இணைந்து பல அடுக்குமாடிகளை கொண்ட மிக பிரம்மாண்டமான ஒரு பங்களா வீட்டை கட்டுகிறார்கள். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
View this post on Instagram