தென் தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் திருக்கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இருக்கிறது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக வருகிறார்கள். இந்நிலையில் கோவிலில் வைக்கப்பட்டுள்ள 10 நிரந்தர உண்டியல்கள், ஒரு கால் நடை உண்டியல் மற்றும் ஒரு அன்னதான உண்டியல் ஆகியவைகள் திறக்கப்பட்டது.
இந்த உண்டியல் எண்ணும் பணி மதுரை திருப்பரங்குன்றம் துணை ஆணையர் சுரேஷ், இருக்கன்குடி கோவில் ஆணையர் கருணாகரன், கோவில் பரம்பரை அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் வங்கி அலுவலர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த உண்டியலில் இருந்து 35,37,345 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. மேலும் இதுபோக 175 கிராம் தங்கம் மற்றும் 355 கிராம் வெள்ளி போன்றவைகள் கிடைத்துள்ளது.