Categories
சினிமா தமிழ் சினிமா

அடேங்கப்பா!… “கடல் போல் திரண்ட ரசிகர்கள்”…. சூப்பர் ஸ்டாரை ஓவர் டேக் செய்த ஷாருக்…. கூட்டத்த பாத்தீங்களா….!!!!!

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பிறகு நடிகர் ஷாருக்கான் தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகைகள் நயன்தாரா மற்றும் பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்த வருடம் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் அண்மையில் தன்னுடைய 57-வது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார். இந்த பிறந்தநாள் விழாவின்போது நடிகர் ஷாருக்கானுக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக அவருடைய ரசிகர்கள் அவரின் வீட்டின் முன்பாக கடல் போல் திரண்டுள்ளனர்.

அவர்களுடன் நடிகர் ஷாருக்கான் செல்பி எடுத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை நடிகர் ஷாருக்கான் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு அன்பு கடலுக்கு முன் வாழ்வது அற்புதமானது. என்னுடைய பிறந்தநாளின் போது இந்த அன்பு கடலானது பெருகி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படத்தை பார்த்த தமிழ் ரசிகர்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிப்பதற்காக சென்ற ரசிகர்களை விட ஷாருக்கானுக்காக சென்ற ரசிகர்கள் தான் அதிகம் என்றும், ரஜினியை ஷாருக் ஓவர் டேக் செய்துவிட்டார் என்றும் கூறி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

 

Categories

Tech |