பிரிட்டனில் லிபர்டி பரோஸ்(14) என்ற சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி ஜிம்னாஸ்டிக் கலைஞர். இவர் தனது உடலை பின்பக்கமாக வளைத்து காலுக்குள் தலையை நுழைத்து நெஞ்சு பகுதி தரையில் படுமாறு செய்து அசைத்துவிட்டார். அதாவது ஒட்டுமொத்த உடலையும் பின்பக்கமாக வளைத்து உருண்டை ஆகிவிடுகிறார். அதுமட்டுமில்லாமல் வெறும் 30 நொடிகளில் இதனைபோல அவர் மீண்டும் மீண்டும் 11.5 முறை செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.
இது குறித்து லிபர்டி பரோஸ் கூறியது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மிகவும் பெருமை அடைகிறேன். இது மிகப்பெரிய சாதனையை. என் உடலின் வளையும் தன்மையை நான் உணர்ந்து கொண்டது தான், நான் நினைத்ததை விடவும் மிகப்பெரிய இடத்திற்கு என்னை அழைத்துச் சென்றுள்ளது. அது எனது வாழ்க்கையை மாற்றிவிட்டது என்று தெரிவித்துள்ளார்.