பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் இருந்து ரசிகர்களின்அமோக ஆதரவை பெற்ற ஜிபி முத்து தானாக வெளியேறிய நிலையில், சாந்தி, செரினா, விஜே மகேஸ்வரி, அசல், நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். தற்போது வீட்டுக்குள் 14 நபர்கள் இருக்கும் நிலையில், நிகழ்ச்சி 53-வது நாளை எட்டியுள்ளது.
இந்த வாரம் பழங்குடியினர் மற்றும் ஏலியன்களுக்கு இடையே வளத்தை மீட்கும் போராட்டம் டாஸ்காக கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் அமுதவாணன் சட்டையை பிடித்துக் கொண்டு உனக்கு நெஞ்சு உறுப்பு இருந்தா, அவ்வளவு தைரியம் இருந்தால் என்ன அடி என்று அசீம் கூறுகிறார். இதனுடன் ப்ரோமோ நிறைவடைகிறது. மேலும் இந்த வீடியோ பார்வையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.