Categories
பசும்பால்

அடேங்கப்பா!…. ஜி-மெயிலில் இவ்வளவு விஷயம் இருக்கா?…. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே….!!!!

சமூக வலைத்தளங்கள் என்னதான் தனி நபர்களுக்கு உதவியாக இருந்தாலும் அலுவல் ரீதியாக தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு டிஜிட்டல் புறாவாக இருப்பது ஜிமெயில் தான். கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான ஜிமெயில் தகவலை அனுப்ப பெற பெரிய கோப்புகளை அனுப்ப மற்றும் பெற என பல விதங்களில் உதவுகிறது. சில நேரங்களில் பலர் இது பாதுகாப்பான வழிமுறைதானா? என்கின்ற சந்தேகமும் வருகிறது. தாங்கள் அனுப்பக்கூடிய மெயில் பாதுகாப்பாக செல்கிறதா அல்லது வேறு யாரும் அதை படிக்க முடியுமா என்று யோசிப்பது உண்டு. ஆனால் அப்படி ஒரு confidential mail வழக்கம்போல் மெயில் என்று சொல்லப்படும் பாதுகாக்கப்பட்ட மயில் அனுப்ப வேண்டும் என்று விரும்பினால் அதற்கு ஜிமெயில் ஒரு ஆப்ஷன் உள்ளது. அதாவது மெயில் பாக்ஸ் செல்லும்போது கீழே சதுரமாகவோ அல்லது வட்டமாகவோ இருக்கும் பெட்டியில் பேனா போன்ற ஒரு சிம்பல் கம்போஸ் என்று இருக்கும்.

அதற்குள் சென்றால் நீங்கள் மெயில் டைப் செய்ய வேண்டிய சாளரம் திறந்து விடும். அதில் வலது புறத்தில் மேல் பக்கமாக பார்த்தால் 3 இருக்கும். அந்த மூன்று புள்ளியை தொட்டால் பல ஆப்ஸ்கள் திறக்கும். அதில் மூன்றாவது இடத்தில் confidential mode என்று இருக்கும். அதற்குள் சென்றால் set expiration என்ற ஆப்ஷன் இருக்கும். அதன் மூலம் நீங்கள் அனுப்பும் மெயில் எத்தனை நாளில் மறைய வேண்டும் என நீங்கள் முடிவு செய்யலாம். அதாவது, ஒரு நாளில் துவங்கி ஒரு வாரம், ஒரு மாதம், 3 மாதங்கள், 5 வருட என உங்களுக்கு தேவையான நேரத்திற்கு மெயில் மறைவது போல் நீங்கள் செட்டிங் செய்து கொள்ளலாம். அதனைப் போல பாஸ்வேர்ட் போட்டு பாதுகாப்பாக அனுப்பும் ஆப்ஷனும் உள்ளது. அதாவது, Require passcode என்று ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் சென்றால் sms passcode என்ற ஆப்ஷன் மூலம் உங்கள் மெயில் பெறுபவரின் மொபைல் எண்ணை கொடுத்து விட்டால் அவருக்கு பாஸ்கோட் எஸ்எம்எஸ் வழியாக சென்று விடும். அந்த பாஸ்கோட் உள்ளவர் மட்டுமே அந்த மெயிலை திறக்க முடியும். மேலும் இந்த வழிமுறை பின்பற்றி பாதுகாப்பான முறையில் தகவல் தகவல்களை பரிமாறிக் கொள்ளுங்கள்.

Categories

Tech |