Categories
மாநில செய்திகள்

அடேய் என்னடா இது!…. ஒரு ரூம்ல 2 டாய்லெட் விவகாரம்….. சிப்காட் திட்ட அலுவலர் விளக்கம்….!!!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பிள்ளைப்பாக்கம் பகுதியில் சிப்காட் தொழில் பூங்கா செயல்பட்டு வருகிறது. இந்த சிப்காட் திட்ட அலுவலகத்திற்கு ரூ.1,80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக திட்ட அலுவலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில் இருந்து காணொளி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வப் பெருந்தகையுடன் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா, பொறியாளர் கார்த்திக், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் முன்னிலையில் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்து அலுவலர்களின் பயன்பாட்டிற்கு கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த இந்த புதிய திட்ட அலுவலகத்தில் உள்ள கழிவறையில் ஒரே அறையில் இரண்டு பேர் அருகே அருகே அமரும் வகையில் வெஸ்டர்ன் டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது, பெரும் சர்ச்சை ஏற்பட்டு பேச பொருளாகி உள்ளது. மேலும் தற்போது இந்த விவாகர சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பல்வேறு விமர்சனங்களை எழுப்பி வருகிறது. இது குறித்து பிள்ளைப்பாக்கம் சிப்காட் திட்ட அலுவலர் கவிதா கூறியது, தமிழகம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்த இந்த அலுவலகத்தில் பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை என்றும் இரண்டு வெஸ்டர்ன் டாய்லெட் இடையில் தடுப்பு சுவர் ஏற்படுத்தி இரண்டு கழிவறைகளாக முழுமைப்பெறும் என்று தெரிவித்தார். அதனை தொடர்ந்து இது குறித்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம். ஆர்த்தி கூறியது, இந்த விவகாரம் தொடர்பான தகவல் எனக்கு இன்னும் வரவில்லை. தகவல்கள் பெற்ற பின் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |