Categories
சினிமா தமிழ் சினிமா

அடடே! தளபதி விஜய் செய்த காரியம்…. நெகிழ்ந்து போன இலங்கை ரசிகர்….. என்னன்னு நீங்களே பாருங்க….!!!!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின் ஆக நடித்த, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சாம், குஷ்பூ, மீனா மற்றும் சங்கீதா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படம் அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதே நாளில் தல அஜித் நடிக்கும் துணிவு திரைப்படமும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் ஒரு மாற்றம் செய்துள்ளார்.

அதாவது DP-யில் இருக்கும் புகைப்படத்தை நடிகர் விஜய் மாற்றியுள்ளார். அந்த புகைப்படம் இலங்கையை சேர்ந்த ரசிகர் ஒருவரால் வரையப்பட்டது. இது தொடர்பான புகைப்படத்தை இலங்கை ரசிகரான கஜேந்திரா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதோடு இந்த புகைப்படத்தை டிபியில் வைத்ததற்கு ரொம்ப நன்றி தலைவா. இந்த நாளை என்னுடைய வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று பதிவிட்டுள்ளார். மேலும் துணிவு திரைப்படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ரசிகர் ஒருவர் வரைந்த புகைப்படத்தை நடிகர் விஜய் டிபியாக மாற்றியிருப்பது சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Categories

Tech |