செல்போன் நம்பரை மட்டும் கேட்கும் வகையில் காவலன் செயலி மாற்றி அமைக்கப்படும் என்று ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி அறிமுக விழாவில் ஏடிஜிபி ரவி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் பேசுகையில், உலகிலேயே பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக உள்ளன. குழந்தைகளை ஆபாச படம் தொடர்பாக 30 பேர் பட்டியல் சென்னை காவல் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.மாணவிகள் சிலர் குழந்தைகள் ஆபாச படம் பார்த்ததாக கூறி என்னிடம் வந்து கண்ணீர் விட்டு மன்னிப்பு கேட்டனர். அவர்களிடம் நான் இனிமேல் பார்க்க வேண்டாம் என அறிவுரை கூறினேன் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், பெண்கள் ஆபாசமாக உடை அணிவதால் கூறுகிறார்கள் எப்படி உடை அணிவது என்பது அவர்களது விருப்பம். பெண்கள், ஊடகம் போலீஸ் மீது கை வைத்தால் சட்டம் கடுமையாக தண்டிக்கும் என்று தெரிவித்தார். மேலும் செல்போன் நம்பரை மட்டும் கேட்கும் வகையில் காவலன் செயலி மாற்றி அமைக்கப்படும் என்றும், பயன்படுத்த எளிமையாக இல்லை என புகார்கள் வந்ததால் காவலன் செயலில் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.