Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… குறுஞ்செய்தி மூலம் பணம் கொள்ளை… நூதன முறையில் திருடும் கொள்ளையர்கள்….!!

குறுஞ்செய்தி மூலம் மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் குற்றவாளிகள் முயன்று வருவதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

வங்கி சார்ந்த சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . மக்களிடமிருந்து பணத்தை கொள்ளையடிக்க சைபர் கொள்ளையர்கள் பல புதிய யுக்திகளை கையாண்டு வருகின்றனர். தற்போது ஒரு நூதன கொள்ளை முறை உருவாகியுள்ளது.  அதாவது  ஒரு நபரின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது என்ற   குறுஞ்செய்தி ஒன்று முதலில்  செல்போனுக்கு வருகிறது. குறுஞ்செய்தி வந்தவுடன் அந்த அடையாளம் தெரியாத நபர் தவறுதலாக உங்கள் வங்கி கணக்கிற்கு பணத்தை பரிமாற்றம் செய்துவிட்டதாக  கூறி உங்களிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

வங்கிக்கு சென்று தம்முடைய கணக்கில் உண்மையாகவே பணம் பரிமாறப்பட்டதா என ஆய்வு செய்ய விடாமல் உங்களைத் திசை திருப்பி உடனடியாக கூகுள் பே அல்லது பேடிஎம் மூலம் அந்த பணத்தை  உடனே திருப்பி அனுப்புமாறு அந்த அடையாளம் தெரியாத நபர் கூறுகிறார். இந்த முறை மூலம் பணத்தை நூதன முறையில் சைபர் கொள்ளையர்கள் பணத்தை கொள்ளை அடிக்க முயலுகின்றனர். பண பரிமாற்றம் செய்யும் போது வங்கி அனுப்பும் குறுஞ்செய்தி போன்று போலியாக குறுஞ்செய்தி அனுப்பி நூதன முறையில் ஏமாற்றுவதை சைபர் கொள்ளையர்கள் புதிய யுக்தியாக  தொடங்கி உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுபோன்ற சைபர் குற்றங்கள் அதிகமாக நிகழ்வதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.  எனவே வங்கி கணக்கில் இருந்து பணம் பரிமாற்றம்செய்யப்பட்டது போன்று குறுஞ்செய்தி செல்போனுக்கு வந்தால்  பொது மக்கள் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும் என்று அடையாறு துணை ஆணையர் விக்ரமன் சமூகவலைதளத்தில் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Categories

Tech |