தமிழ் சினிமாவில் பல வருடங்களாக முன்னணி கதாநாயகராக ஜொலிப்பவர் கமல்ஹாசன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் 400 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் பகத் பாஸில் மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு தன்னுடைய 234-வது திரைப்படத்தில் மணிரத்தினத்துடன் கூட்டணி வைத்துள்ளார் கமல்.
அதோடு இயக்குனர் எச். வினோத் இயக்கத்திலும் நடிகர் கமல் ஒரு புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த 2 படங்களையும் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் 233 -வது திரைப்படத்தில் விக்ரம் படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதியே மீண்டும் வில்லனாக நடிக்க இருப்பதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.