3500 வருடங்களுக்கு முன் மேற்கு ஆப்பிரிக்க மக்கள் கீரைகளையும் இலைகளையும் சாப்பிட்டதை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
ஆதி மனிதர்கள் கீரை வகைகளை தான் அதிகமாக சாப்பிட்டிருக்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது. ஜெர்மன் நாட்டில் உள்ள Goethe என்ற பல்கலைகழகமும், இங்கிலாந்தில் இருக்கும் பிரிஸ்ட்டல் என்ற பல்கலைகழகமும் இணைந்து 450 க்கும் அதிகமான வரலாற்று பானைகளை ஆராய்ச்சி செய்திருக்கிறது. இதில் 66 லிப்பிடுகளின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது நீரில் கரையாத கொழுப்புகளின் தடயங்கள் இருந்திருக்கிறது.
ஆராய்ச்சியாளர்கள், ஆதிகால மக்கள் சமையலுக்கு உபயோகப்படுத்திய தாவரங்கள் எவை? என்று கண்டறிய தொடங்கினார்கள். அதன்படி, அந்த தாவர வகைகள், மேற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த உணவு வகைகள் எனவும், இவை சுமார் 3500 வருடங்களுக்கு முன்பு உள்ளது எனவும் உறுதிப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த தாவர வகைகளுடன் மசாலா, காய்கறிகள், இறைச்சி அல்லது மீனை சேர்த்து சமைக்கிறார்கள். ஆனால் அந்த கால கட்டங்களில், இந்த கீரை வகைகள் மற்றும் இலைகளுடன் மேற்கு ஆப்பிரிக்காவின் தெற்கு பகுதியில் இருக்கும் கிழங்கு மற்றும் வட ஆப்பிரிக்காவிலுள்ள திணையை பயன்படுத்தி கஞ்சி போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவை தயாரித்து சாப்பிட்டிருக்கிறார்கள் என்பது தெரியவந்திருக்கிறது.