Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

“ஆடி மாதம் சிறப்பு வழிபாடு” விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்…. திரண்டு வந்த பக்தர்கள்….!!

ஆடி மாதம் முதல் செவ்வாய் கிழமையை முன்னிட்டு நேற்று அம்மன் கோவில்களில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில், நாகர்கோவில் வடிவீஸ்வரம் அழகம்மன் கோவில், நடுக்காட்டு இசக்கியம்மன் கோவில், வடசேரி மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் போன்ற அம்மன் கோவில்களில் அரசு விதித்துள்ள நெறிமுறைகளுடன் ஆடி மாத சிறப்பு வழிபாடு நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதில் பெரும்பாலான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனையடுத்து செண்பகராமன்புதூர் அருகில் உள்ள அவ்வையார் அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் ஏராளமானோர் வந்து கூழ், கொழுக்கட்டை படைத்து வழிபாடு நடத்துவது சிறப்பு அம்சமாக இருக்கின்றது.

இதற்காக கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களான நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரளாவில் இருந்தும் பெரும்பாலானோர் வந்து அவ்வையார் அம்மன் கோவில் வளாகத்திலேயே கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து அம்மனுக்கு வழிபாடு நடத்துவது வழக்கமாக இருக்கின்றது. ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் அம்மன் கோவிலில் கொழுக்கட்டை அவித்து படைக்க பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அம்மனை தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அவ்வையார் அம்மன் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அதன்பின் தக்கலையில் இருந்து வாகனத்தில் வந்தவர்கள் அவ்வையார் அம்மனுக்கு படைப்பதற்காக கூழ் மற்றும் கொழுக்கட்டைக்குரிய பொருட்களை கொண்டு வந்தனர். இதனைதொடர்ந்து விதிக்கப்பட்ட தடையை மீறி கோவில் அருகில் உள்ள தோப்புகளில் கொழுக்கட்டை மற்றும் கூழ் தயார் செய்து பின் அவர்கள் அங்கு இருந்தபடியே அம்மனை வழிபட்டனர். அதன்பின் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்கு அவர்கள் பஜனைகள் பாடி ஆலயத்தின் வெளி பிரகாரத்தை சுற்றி வந்து தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரைப் பகுதியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டது.

Categories

Tech |