ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றதால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது. அதாவது திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவில், தண்டு மாரியம்மன் கோவில் மற்றும் முத்துமாரியம்மன் கோவில்களில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ஆனால் பக்தர்கள் ஆடு, கோழி போன்றவை பலியிடவும், பொங்கல் வைக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர். இதனையடுத்து திருப்பத்தூர் சின்னகுளம் மாரியம்மன் கோவிலில் ரேணுகா பரமேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதேபோன்று பல்வேறு கோவிலில் அம்மனுக்கு பூஜைகள் நடந்ததால் பெரும்பாலான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பின் புத்துகோவிலில் மிகவும் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் இருக்கின்றது. இங்கு ஆடி முதல் வெள்ளிக் கிழமையை முன்னிட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்தக் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெரும்பாலான பக்தர்கள் புத்துக்கோயில் மாரியம்மன் கோவிலுக்கு திரண்டு வந்து அம்மனை தரிசனம் செய்தனர். அப்போது பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் சுவாமி தரிசனம் செய்தனர்.