பிரபலமான விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த சீரியலின் மூலம் நடிகர் கார்த்திக் ராஜ் மிகவும் பிரபலமானார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் என்ற சீரியலிலும் கார்த்திக் ராஜ் ஹீரோவாக நடித்தார். இந்த சீரியலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் மிகவும் பிரபலமானார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியை ஒளிபரப்பான செம்பருத்தி சீரியலுக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்தது. இந்த சீரியல் தான் கார்த்திக் ராஜுக்கு முன்னணி ஹீரோ என்று அந்தஸ்தையே பெற்றுக் கொடுத்தது என்று கூறலாம்.
அந்த அளவுக்கு செம்பருத்தி சீரியல்மற்றும் அதில் நடித்த நடிகர் கார்த்திக் ராஜ், நடிகை ஷபானா ஆகியோருக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது. ஆனால் திடீரென கார்த்திக் ராஜ் சீரியலில் இருந்து விலகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் நடிகர் கார்த்திக் ராஜ் மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு புது சீரியலில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கார்த்திக் ராஜ் கிட்டத்தட்ட சீரியல் நடிப்பது 100 சதவீதம் உறுதியானதாக கூறப்படுவதால், ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.