நடிகை நயன்தாரா நடிக்கும் பிரம்மாண்டமான திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவினரிடமிருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமாவில் லேடிஸ் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. இவர் தல, தளபதி என பல்வேறு முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இதனை அடுத்து இவர் நடித்துள்ள கோல்ட் கனெக்ட் என்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து நயன்தாரா 75 மற்றும் இறைவன் போன்ற திரைப்படம் தயாராகியுள்ளது. மேலும் நடிகை நயன்தாரா புதியதாக ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார்.
இந்த படத்தை கேஜிஎஃப் மற்றும் காந்தாரா போன்ற திரைப்படங்களை தயாரித்த ஹோம்பலே என்ற பிலிம்ஸ் தான் தயாரித்துள்ளது. மேலும் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் படக்குழுவினரிடம் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.