Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

காலை உணவுக்கு சத்தான, ருசிமிக்க அடை தோசை..!!

காலை உணவுக்கு ஏத்த சத்தான, ருசிமிக்க அடை தோசை:

ரொம்ப ருசியான, ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட. இந்த தோசையில்  அனைத்து வகையான பருப்பு வகைகளையும் போட்டு செய்வதால் அதன் ருசியே தனி, இந்த காலையில் நாம் சாப்பிட்டால், உடலுக்கு தேவையான  சத்துக்கள் கிடைக்கும். அன்றைய நாள் நம் உடல் சுறுசுறுப்புடன் இருக்கும். பசியும் தாங்கும்.

இவை அனைத்தையும் 2 மணி நேரம் ஊறவைச்சி  அரைத்து கொள்ள வேண்டும்.

தேவையான பொருட்கள்:

புழுங்கல் அரிசி – 1 கப்

பச்சரிசி – 1/2 கப்

உளுத்தம் பருப்பு – 1/2 கப்

துவரம் பருப்பு – 1/2 கப்

பாசி பயறு – 1/2 கப்

கொள்ளு – 1/2 கப்

கடலைப் பருப்பு – 1/2 கப்

இவைகளை அரைக்கும்பொழுது அதனுடன் போடவேண்டும்.

வரமிளகாய் – 8

சோம்பு – 1 டீஸ்பூன்

சீரகம் – 1 டீஸ்பூன்

பூண்டு – 10 பல்

இஞ்சி – 1 துண்டு

உப்பு – தேவையான அளவு

தாளிப்பதற்கு தேவையானவை:

வெங்காயம் – 2

கொத்தமல்லி – சிறிது

கறிவேப்பிலை – சிறிது

கடுகு – 1 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன்

கசகசா – 1/2 டீஸ்பூன்

தேங்காய் – 1/2 மூடி

எண்ணெய் – 3 டீஸ்பூன்

செய்முறை:

முதலில்  எல்லா பருப்புகளையும், அரிசியையும் 2 மணி நேரம் ஊற வைத்து நன்றாக  கழுவி, கிரைண்டரில் போட்டு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும். மாவு அரைத்து கொண்டிருக்கும்போதே  அதனுடன் சேர்த்து அரைக்கவேண்டிய மற்ற பொருட்களையும் போட்டு மை போல மென்மையாக அரைத்து கொள்ளாமல், ஓரளவிற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.  பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, சூடானதும், தாளிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடு ஏறியதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை எல்லாம் போட்டு தாளித்து, அப்புறம் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வரும் வரை வதக்க வேண்டும்.

பின்னர்  கொத்தமல்லி, கசகசா சேர்த்து நன்கு கிளறி, துருவி வைத்துள்ள தேங்காயை போட்டு, சிறிது உப்பு சேர்த்து 2 நிமிடம் பிரட்டி இறக்கி கொள்ள வேண்டும். அதை அரைத்து வைத்துள்ள மாவில் போட்டு நன்றாக கலக்கி எடுத்து கொள்ளவேண்டும்.  அவ்ளோதா கடைசியில் தோசைகளாக ஊற்றி எடுத்து சாப்பிட்டால் அப்படி ஒரு ருசி..

Categories

Tech |