Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்படும் விபத்து…. தீர்வு காண நடவடிக்கை…. கலெக்டரின் ஆய்வு….!!

மலைப்பாதையில் விபத்தினை தடுக்கும் வகையில் நிரந்தரத் தீர்வு காண கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார் .

தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுங்கச்சாவடி முதல் தொப்பூர் வரை உள்ள மலைப்பாதையில் அடிக்கடி வாகன விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த பகுதியில் உயிரிழப்புகள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி தொப்பூர் மலைப்பாதையில் விபத்துகள் நடக்கும் பகுதிகளில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த பகுதியில் தற்காலிக தீ விபத்துக்களை குறைக்கும் வகையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அங்கு விபத்துகளை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கச்சாவடி நிர்வாகிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.

மேலும் விபத்துகளை குறைப்பதற்கு நிரந்தர தீர்வாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல்களை விரைவாக பெற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்ட இயக்குனருக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். அதன்பின் மலைப்பாதையில் நிர்ணயிக்கப்பட்ட வேக வரம்பான 30 கிலோ மீட்டருக்கு மேல் இயக்கப்படும் வாகனங்களின் வேகம் கண்காணிக்கும் கருவி மூலமாக அபராதம் விதிக்கும் பணியையும் கலெக்டர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், சேலம் சரக துணை போக்குவரத்து ஆணையர் பிரபாகரன், வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை, தாசில்தார் செந்தில் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள், சுங்கச்சாவடி அதிகாரிகள் மற்றும் பெரும்பாலானோர் அவருடன் இருந்தனர்.

Categories

Tech |