பேக்கரி ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு புது பட்டாணியர் தெருவில் ஜானகிராமன் என்பவர் வசித்து வந்தார். இவர் பேக்கரி கடை ஊழியராகவேலை பார்த்து வந்தார். இவருக்கு பாரதி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். கடந்த சில மாதங்களாக கடன் பிரச்சனையால் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் பாரதி தன் குடும்பத்தினருடன் உடுமலைபேட்டைக்கு சென்று விட்டார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த ஜானகிராமன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜானகிராமனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.