Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. சங்கிலியால் கட்டி ராணுவ வீரரின் மனைவியை…. கன்னியாகுமரியில் பரபரப்பு….!!

குளச்சல் அருகில் ராணுவ வீரர் மனைவியை கோவிலில் சங்கிலியால் கட்டி தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராணுவ வீரருக்கு திங்கள்சந்தை பகுதியில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கும் கடந்த 2013-ஆம் ஆண்டு திருமணம் முடிந்தது. இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகனும், 4 வயதில் ஒரு மகளும் இருக்கின்றனர். இதனையடுத்து சொந்த ஊரில் இளம்பெண்ணும் மாமியாரும் ஒன்றாக இருந்த நிலையில் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த இளம்பெண் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

இதனையடுத்து மாமியாரைப் பற்றி இளம் பெண் தன் பெற்றோரிடம் வேதனையில் தெரிவித்துள்ளார். அதன்பின் இளம்பெண் மனரீதியாக பாதிக்கப்பட்டதால் பெற்றோர் அவரை குளச்சல் அருகில் உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றனர். ஆனாலும் அந்த பெண்ணிற்கு மன ரீதியான பிரச்சனை தீரவில்லை. அதன் பிறகு அவரை சங்கிலியால் கட்டி தாக்கியதாக தெரிகின்றது. இதனைத் தொடர்ந்து விடுமுறையில் ஊருக்கு வந்த கணவர் கோவிலுக்கு சென்று மனைவியை பார்த்து எந்த விசாரணையும் நடத்தாமல் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் இளம்பெண் கதறி அழுததால் அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளம்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் ராணுவ வீரருக்கு காவல்துறையினர் அறிவுரை கூறி அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம் பெண்ணை சங்கிலியால் கோவிலில் கட்டிப் போட சொன்னது யார்..? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |