Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடிக்கடி நிகழ்ந்த திருட்டு…. மாட்டி கொண்ட வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கோயம்புத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரத்தினபுரி, ஆர்.எஸ். புரம், துடியலூர், கவுண்டம்பாளையம் போன்ற பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போவது குறித்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேலும் திருட்டு நடைபெற்ற பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை காவல்துறையினர் ஆய்வு செய்து மர்ம நபரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது இந்த திருட்டு வழக்கில் ஈடுபட்டது சரவணம்பட்டி அண்ணா நகரைச் சேர்ந்த குஞ்சன் என்ற விவேகானந்தன் என்பது காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் குஞ்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது பல்வேறு பரபரப்பு தகவல்கள் தெரியவந்தது.

அதன்பின் காவல்துறையினர் அவரிடம் இருந்த 6 மொபட், ஒரு ஸ்கூட்டர் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். எனவே குஞ்சன் மீது பல இருசக்கர வாகன திருட்டு வழக்குகள் இருக்கின்றது. இவ்வாறு குஞ்சன் கைதாகி சிறையில் இருந்து வெளிவந்த நிலையில் மீண்டும் திருட்டில் ஈடுபட்டுள்ளது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இருசக்கர வாகனங்களை குஞ்சன் திருடினால் உடனடியாக கோவையில் இல்லாமல் மேட்டுப்பாளையம், கவுண்டம் பாளையம் போன்ற பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்து அந்தப் பணத்தை வைத்து சொகுசாக இருந்ததும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து குஞ்சன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |