வயிற்றுவலி காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள விசலூர் மேட்டுத் தெருவில் பாஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு திவ்யா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அடிக்கடி வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் வயிற்று வலி அதிகமானதை தாங்கமுடியாமல் திவ்யா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று திவ்யாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.