Categories
சினிமா

அடிக்கடி கேட்டுட்டே இருந்தேன்…. பாத்ததும் கட்டிப்பிடித்துவிட்டேன்….. நெகிழ்ந்து போன வரலட்சுமி …!!

முன்னணி நடிகையாக தமிழில் வலம் வரும் வரலட்சுமி சரத்குமார், நாயைப் பார்த்த மறுகணமே கட்டிப்பிடித்துவிடுவேன் என கூறியுள்ளார்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து பி.ஜி.முத்தையா தயாரித்த படம் தான் ‘டேனி’. இப்படத்தை சந்தானமூர்த்தி இயக்கியுள்ளார். வரலட்சுமியுடன் இணைந்து யோகி பாபு, சாயாஜி ஷிண்டே ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஆனந்த்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள ஒரு கிராமத்தின் காவல் நிலையத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. காவல் நிலையத்தின் மையத்தில் நடக்கும் ஒரு கொலையை துப்பறியும் காவல் அதிகாரியாக வரலட்சுமி நடித்துள்ளார். இவருடன் இணைந்து பிங்கி என்ற நாயும் நடித்துள்ளது. இப்படத்தில் அதன் பெயர் டேனி. உடனிருக்கும் யாரையும் நம்பாமல் வரலட்சுமியும் அவருடைய நாயும் இணைந்து எவ்வாறு அந்த கொலையாளியை கண்டு பிடித்தார்கள் என்பதே படத்தின் கதையாகும்.

இப்படத்தினை பற்றி வரலட்சுமி கூறுயதாவது: டோனி என்ற நாய் தான் இப்படத்தின் ஹீரோ இதில் நான் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன்.மேலும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் நான் யாரிடமும்  கற்றுக்கொள்வதில்லை என்றும் இந்த படத்தில் காவல்துறை உடை அணிந்த பின்னர் இயக்குனர் என்ன சொல்கிறாரோ அதற்கு ஏற்றார் போல் நடித்திருக்கிறேன். இத்திரைப்படத்தில் நாய்க்குட்டி உடன் நடிப்பது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கதை மிகவும் அழகாக இருந்தது ஒரு கொலை நடக்கிறது எப்படி அடுத்தகட்டமாக கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை தேவையில்லாத காட்சிகள் எதுவும் இருக்காது. படப்பிடிப்பு தளத்தில் நான் நாயை கண்ட உடனே போய் கட்டிப்பிடித்துவிடுவேன். படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் டேனி எப்போது வரும் என்றுதான் முதலில் கேட்டுக்கொண்டே இருப்பேன். அதனுடைய காட்சிகளுக்குப் பின்பு அதன் இருக்கையை தேடிப்போய் அழகாக அமர்ந்து கொள்ளும். கேமரா படப்பிடிப்பு இது எல்லாம் நாமக்கு புரிகின்றது. ஆனால் பல டேக்குகள் வாங்காமல் ட்ரெய்னர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே சரியாக செய்கிறது என்று  அவர் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |