Categories
கிரிக்கெட் விளையாட்டு

“அடிமேல் அடி வாங்கும் நியூசிலாந்து “….! இந்திய மண்ணில் தொடரும் மோசமான சாதனை ….!!!

நியூசிலாந்து அணிக்கெதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றுள்ளது.

இந்தியா -நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான  2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது .இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது .இதனிடையே 2-வது டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 325 ரன்கள் எடுத்தது. இதன்பிறகு களமிறங்கிய நியூசிலாந்து அணி 62 ரன்னில் சுருண்டது .இதனால் 263 ரன்கள் முன்னிலையில் இருந்தாலும்  இந்திய அணி பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது .இதில்  7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்திருந்தபோது 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது .மொத்தமாக இந்திய அணி 539 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதனால் நியூசிலாந்து அணி 540 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில்  நேற்று 3-ம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் குவித்தது .இதனிடையே இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது .இதில் களமிறங்கிய  வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற நியூசிலாந்து அணி 167 ரன்னில் சுருண்டது. இதனால் 372 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.இதில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணி இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மோசமான சாதனையை படைத்துள்ளது. குறிப்பாக  கடந்த 1955 -56 ம் ஆண்டு  முதல் இந்தியாவில் 12 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி இதுவரை ஒரு முறை கூட வென்றதில்லை.

Categories

Tech |