டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் அணி வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரின் இரண்டாவது பகுதி ஆட்டம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 36 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின .இதில் 33 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி அடைந்தது .இந்நிலையில் ராஜஸ்தான் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதற்காக அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .
அதோடு அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு தலா ரூபாய் 6 லட்சம் அபராதம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.இதனை ஐபிஎல் நிர்வாகக் குழு தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பந்துவீச்சுக்கு தாமதமானதால் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.