Categories
கிரிக்கெட் விளையாட்டு

அடிமேல அடிவாங்கும் மோர்கன்…! ‘தோத்த மேட்ச்ல இருந்து வெளிய வரதுக்குள்ள’ …இன்னொரு அதிர்ச்சி…!!!

நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி , பீல்டிங் செய்வதற்கு  அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக ,அணியின் கேப்டனான  மோர்கனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது .

நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்  -கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில், சிஎஸ்கே அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இதில் ருதுராஜ்,                டு பிளசிஸ் இருவரும் அதிரடி ஆட்டத்தை காட்டினார். இறுதியாக சிஎஸ்கே 20 ஓவர் முடிவில் 220 ரன்கள் குவித்தது. 221 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு கொல்கத்தா களமிறங்கிய கொல்கத்தா அணி ,31 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது . இதன்பிறகு களமிறங்கிய  தினேஷ் கார்த்திக்-ஆண்ட்ரூ ரசல் பாட்னர்ஷிப் அதிரடி காட்டியது .இருவரும் சிஎஸ்கே அணி அணியின் பந்துகளை சிக்ஸர் ,பவுண்டரி என அடித்து விளாசினார் .

இதில் தினேஷ் கார்த்திக் 40 ரன்களும் ,ஆண்ட்ரூ ரசல் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர் .இதன் பிறகு களமிறங்கிய பேட் கம்மின்ஸ் வெறித்தமாக விளையாடினார்.பரபரப்புக்கு பஞ்சமில்லாத நேற்றைய ஆட்டத்தில் , இறுதியில் கொல்கத்தா அணி 202 ரன்களை  தோல்வியை சந்தித்தது .  அதோடு  முதல் இன்னிங்ஸில் கொல்கத்தா அணி , குறித்த நேரத்திற்குள் பீல்டிங் செய்ய தவறி விட்டதால் அணியின் கேப்டனான  மோர்கனுக்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக ஐபில் நிர்வாகம் விதித்துள்ளது .

Categories

Tech |